ஆந்திர பிரதேசம்: திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்; பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு


ஆந்திர பிரதேசம்:  திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்; பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
x

ஆந்திர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்றவர்களை ஏற்றி கொண்டு சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தர்சி,

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பொடிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காகிநாடா பகுதி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்றவர்களை ஏற்றி கொண்டு அந்த பஸ் சென்று உள்ளது.

அந்த பஸ்சில் 35 முதல் 40 பேர் வரை பயணித்து உள்ளனர். தர்சி நகர் அருகே சென்றபோது, பஸ் கால்வாயில் கவிழ்ந்து உள்ளது. இதனால், பஸ்சில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கி அலறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அப்துல் அஜீஸ் (வயது 65), அப்துல் ஹனி (வயது 60), ஷேக் ரமீஸ் (வயது 48), முல்லா நூர்ஜஹான் (வயது 58), முல்லா ஜானி பேகம் (வயது 65), ஷேக் சபீனா (வயது 35) மற்றும் ஷேக் ஹீனா (வயது 6) ஆகியோர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் அனைவரும் பொடிலி கிராம பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பஸ் கால்வாயில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் அசதியால் தூங்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது.


Next Story