ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய பிரேசில் பக்தர்கள்!
பிரேசிலில் இருந்து இருபத்தி இரண்டு பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர கோவிலுக்கு சென்று பூஜை செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி,
ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி, தென் கயிலாயமாக கருதப்படுகிறது. அங்கு எழுந்தருளியிருக்கும் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாகும். இது, பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக விளங்குகிறது.
இந்தநிலையில் பிரேசிலில் இருந்து இருபத்தி இரண்டு பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர கோவிலுக்கு சென்று திங்கள்கிழமை பூஜை செய்தனர். இந்து மதம் மீது பற்றுகொண்ட அவர்கள் அனைவரும் சிறப்பு ராகு கேது பூஜையை பக்தர்கள் செய்தனர்.
பிரேசில் பக்தர்கள் கோவிலில் பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி மற்றும் பச்சை கற்பூரம் கொண்டு பல்வேறு பூஜை நிகழ்ச்சிகளை நடத்தி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளிநாட்டு பக்தர்கள் வருகை குறித்து, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர நிர்வாக அதிகாரி கூறியதாவது, "பிரேசிலில் இருந்து வரும் பக்தர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சில நாட்களுக்கு முன்பு, பல நாடுகளில் இருந்தும் பக்தர்களைக் கண்டோம்.
பிரேசில் நாட்டு பக்தர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். அதாவது உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இந்து புராணங்களில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. எங்கள் விருந்தோம்பலில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்" என தெரிவித்தார் .