அமித்ஷா முன்னிலையில் அசாம் பயங்கரவாத இயக்கத்துடன் முத்தரப்பு ஒப்பந்தம்


அமித்ஷா முன்னிலையில் அசாம் பயங்கரவாத இயக்கத்துடன் முத்தரப்பு ஒப்பந்தம்
x

அமித்ஷா முன்னிலையில் அசாம் பயங்கரவாத இயக்கத்துடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் திமசா தேசிய விடுதலைப்படை என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்புக்கும், மத்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுக்கும் இடையே நேற்று முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித்ஷா, ஆயுதங்களை ஒப்படைத்து, இயக்கத்தை கலைத்து, தேச கட்டுமான பணியில் இணையுமாறு பயங்கரவாத இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். சரணடையும் பயங்கரவாதிகளின் மறுவாழ்வுக்காக ரூ.1,000 கோடி நிதியுதவியையும் அவர் அறிவித்தார்.


Next Story