மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இராணி, ஆதித்யா சிந்தியாவுக்கு கூடுதல் இலாக ஒதுக்கீடு?
இன்று ஒரேநாளில் 2 மத்திய மந்திரிகளின் அடுத்தடுத்த ராஜினாமா செய்துள்ளனர்.
புதுடெல்லி,
மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மத்திய உருக்குத்துறை மந்திரி ராம்சந்திர பிரசாத் சிங் தங்களது பதவிகளில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஒரேநாளில் 2 மத்திய மந்திரிகளின் அடுத்தடுத்த ராஜினாமாவை தொடர்ந்து அவர்கள் வகித்து இருந்த இலாக மந்திரிகள் ஸ்மிருதி இராணி, ஆதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு உருக்குத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story