நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நேர விவரம் ; 2 நாட்கள் நீடிக்கும்


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நேர விவரம் ; 2 நாட்கள் நீடிக்கும்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:13 PM IST (Updated: 8 Aug 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்த விரிவான அட்டவணை போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்த விரிவான அட்டவணை போடப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்காக மொத்தம் 12 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு நாட்கள் நீடிக்கும்.

கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேர விவரம் வருமாறு:-

பா. ஜனதா கட்சி : 6 மணி 41 நிமிடங்கள்

காங்கிரஸ்: 1 மணி 9 நிமிடங்கள்

தி.மு.க.: 30 நிமிடங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் : 30 நிமிடங்கள்

யுவஜன ஸ்ராமிக்க விவசாயி காங்கிரஸ் கட்சி: 29 நிமிடங்கள்

சிவசேனா: 24 நிமிடங்கள்

ஐக்கிய ஜனதா தளம் : 21 நிமிடங்கள்

பிஜூ ஜனதா தளம் : 16 நிமிடங்கள்

பகுஜன் சமாஜ் கட்சி : 12 நிமிடங்கள்

பாரதீய ராஷ்டிரவதி சமனாதா கட்சி : 12 நிமிடங்கள்

லோக் ஜனசக்தி கட்சி : 8 நிமிடங்கள்

மீதமுள்ள நேரம் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது:

பா.ஜனதாவுக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்கள்: 17 நிமிடங்கள், (அ.தி.மு.க, போன்ற கட்சிகளை உள்ளடக்கியது)

ஒட்டுமொத்தமாக, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுக்கு மொத்தம் 52 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு பா.ஜ.க., சார்பில் விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் பட்டியல்

அமித் ஷா

நிர்மலா சீதாராமன்

கிரண் ரிஜிஜூ

ஜோதிராதித்ய சிந்தியா

ஸ்மிருதி இரானி

லாக்கெட் சாட்டர்ஜி

பண்டி சஞ்சய் குமார்

ராம் கிரிபால் யாதவ்

ராஜ்தீப் ராய்

விஜய் பாகேல்

ரமேஷ் பிதுரி

சுனிதா துக்கல்

ஹீனா காவிட்

நிஷிகாந்த் துபே

ராஜ்யவர்தன் ரத்தோர்


Next Story