பா.ஜ.க. எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை


மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை
x

மது வழங்கியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பா.ஜ.க. எம்.பி. சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்

பெங்களூரு,

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பி ஒருவர் கட்சித் தொடர்களுக்கு (சிக்கன் 65வுடன்) அசைவ உணவுடன் மது விருந்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனவர் சுதாகர்.

தற்போது இவர் தனது வெற்றியை கொண்டாடும் வகையில்

https://www.dailythanthi.com/advance-search?cx=010423942146016428512:vvss5oorw0c&cof=FORID:9&ie=UTF-8&search=பா.ஜ.க.+&siteurl=www.dailythanthi.com/&ref=&ss=

தொண்டர்களுக்கு அசைவ உணவுடன் மது பாட்டில்களை விநியோகித்து மது விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மது பாட்டிலைகளை வரிசையில் நின்று தொண்டர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மது வழங்குவதை அறிந்து பல்லாயிரக்கணக்கானோர் அந்த பகுதியில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விருந்து நடத்தப்போவதாக போலீசிடம் அனுமதி வாங்கிய நிர்வாகிகள். சட்டவிரோதமாக மது பாட்டில்களை விநியோகித்துள்ளதாக கூறப்படுகிறது. நெலமங்களாவை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மது வழங்கியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் நன்றி தெரிவிக்கும் விழாதான் ஏற்பாடுசெய்யப்பட்டதாகவும் ஆதரவாளர்கள் யாராவது மது வாங்கி கொடுத்திருக்கலாம் எனவும் சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் பா.ஜ.க. எம்.பி யின் செயலுக்கு அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கியது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story