தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்


தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்
x

தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. இந்நிறுவனத்தின் விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாயும், விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு விமான நிறுவனங்கள் வழக்கமாக வழங்கும் அறிக்கையின்போது ஏர் இந்தியா நிறுவனம் தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட நிலையில் விமானத்தை தகுதிபெறாத விமானிகளை கொண்டு இயக்கியது உறுதியானது. இதனால், ஏர் இந்தியாவுக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநகரம் தெரிவித்துள்ளது.


Next Story