பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்மானம்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டம் நடந்தது. அதில், வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி.யும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, தனிநபர் சட்டங்கள் அளிக்கும் உரிமைகளை பறித்து விடும். பல மதங்கள், மொழிகள், கலாசாரம் நிறைந்த இந்தியாவுக்கு இச்சட்டம் ஏற்றதல்ல. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
வெறுப்பு பரப்பப்படுவதை கட்டுப்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வக்பு சொத்துகளை பறிக்கக்கூடாது. அமைதியாக போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளை அதிகாரிகள் இடிப்பதை நீதித்துறை தடுக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story