ஓ.பன்னீர்செல்வம் உடன் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு சந்திப்பு


ஓ.பன்னீர்செல்வம் உடன் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு சந்திப்பு
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. 29-ந் தேதி முடிகிறது.

இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு (வயது 64) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் இன்றுதனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வேட்பு மனுவை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கலின் போது அதிமுக சர்பில் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் முர்மு ஆதரவு கோரினார்.

இந்த சந்திப்பின் போது பி.ரவீந்திரநாத் எம்.பி, மனோஜ் பாண்டியன் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் உடன் இருந்தனர்.


Next Story