அக்னிபத் திட்டம் - பணிக்கான வயது வரம்பு 23 ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள்.இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரித்து பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.