கண்டம் விட்டு கண்டம் சென்று துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை- சீனாவை எச்சரிக்கும் வகையில் நடத்தப்பட்டதா?


கண்டம் விட்டு கண்டம் சென்று துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை- சீனாவை எச்சரிக்கும் வகையில் நடத்தப்பட்டதா?
x

ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டரில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 பெல்லஸ்டிக் ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து மாலை 5.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் சென்று, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் தன்மை கொண்ட‌து.

அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய - சீன வீர‌ர்கள் மோதிக் கொண்ட இந்த சூழ்நிலையில், இரவு நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்திய ராணுவம் சோதனை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த‌தாக கருதப்படுகிறது.


Next Story