சந்திர கிரகணம் முடிவடைந்தபின் பரிகார பூஜைகள் செய்து திருப்பதி கோவில் நடை திறப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைநேற்று இரவு மூடப்பட்டது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று இரவு கோவில் நடை மூடப்பட்டது. சந்திர கிரகணத்தை ஒட்டி 6 மணி நேரம் முன்னதாக 7.05 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.
நேற்று நள்ளிரவு 1.05 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்பட்டு 2.22 மணிக்கு நிறைவு பெற்றது. இதையடுத்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் 13 மணி நேரத்திற்கு பிறகு 3.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.திருப்பதியில் நேற்று 47,351 பேர் தரிசனம் செய்தனர். 23,836 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.03 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Related Tags :
Next Story