உடல் நலக்குறைவால் பாதிப்பு: போலீஸ் நாய் 'லைக்கா' உயிரிழப்பு


உடல் நலக்குறைவால் பாதிப்பு: போலீஸ் நாய் லைக்கா உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 8:00 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போலீஸ் நாய் 'லைக்கா' உயிரிழந்தது

மைசூரு

மைசூரு நகர போலீசில் 'லைக்கா' என்ற மோப்ப நாய் பணியாற்றி வந்தது. 9 வயதான இந்த நாய், லேப்ரா டார் இனத்தை சேர்ந்தது ஆகும். மைசூரு போலீசில் பல முக்கிய வழக்குகளில் துப்பு துலங்க இந்த நாய் உதவி செய்துள்ளது. பல்வேறு சாதனைகளை படைத்த இந்த நாய், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.

இதனால் அந்த நாய்க்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த நாய் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த நிலையில் உயிரிழந்த போலீஸ் நாய் லைக்காவுக்கு போலீசார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அந்த நாய்க்கு போலீசார் இறுதிச்சடங்கு நடத்தி உடலை அடக்கம் செய்தனர்.


Next Story