நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்


நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
x

நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13-ந்தேதி, 2 வாலிபர்கள் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து, எம்.பி.க்கள் இருந்த மக்களவைக்குள் குதித்தனர். பின்னர் மஞ்சள் நிற புகைக்குண்டு வீசி அனைவரையும் மிரள வைத்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்த பாதுகாப்பு மீறல் வழக்கு டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் கூடுதல் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும், கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்தீப் கவுர், வழக்கை ஆகஸ்டு 2-ந் தேதி விசாரிக்க பட்டியலிட உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் காவலையும் அடுத்த விசாரணை வரை நீட்டித்தார்.


Next Story