குஜராத்தில் ஒவ்வொரு 4 கி.மீட்டருக்கும் ஒரு பள்ளி: ஆம் ஆத்மி வாக்குறுதி
குஜராத்தில் ஆட்சி அமைத்தால் முக்கியமான 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா வாக்குறுதி அளித்துள்ளார்.
அகமதாபாத்,
குஜராத்தில் ஆட்சி அமைத்தால் முக்கியமான 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா வாக்குறுதி அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி தற்போதே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி துணை முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ்
சிசோடியா , குஜராத் மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தால் அகமதாபாத், சூரத், வதோதரா, ஜாம்நகர், ராஜ்கோட், பாவ்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளியை கட்டுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.