கட்சித் தாவலை ஊக்குவிக்கும் - 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு


கட்சித் தாவலை ஊக்குவிக்கும் - ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Jan 2024 11:30 PM IST (Updated: 20 Jan 2024 11:44 PM IST)
t-max-icont-min-icon

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நாடாளுமன்ற ஜனநாயக சிந்தனையையும், அரசியல் சாசன அடிப்படையையும் சிதைத்துவிடும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், அது தொடர்பான உயர்மட்ட குழுவை கலைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆம்ஆத்மி கட்சி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அரசியலை சேதப்படுத்தும்.

தொங்கு சட்டசபையை சமாளிக்க முடியாமல், கட்சித் தாவல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை வெளிப்படையாக வாங்குதல்-விற்பது போன்ற தீமையை அது தீவிரமாக ஊக்குவிக்கும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் சேமிக்கப்படும் செலவு மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே. குறுகிய நிதி ஆதாயங்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை தியாகம் செய்ய முடியாது" என கூறப்பட்டுள்ளது.


Next Story