2 முறை ஒத்திவைப்பு: டெல்லி மேயர் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மனு


2 முறை ஒத்திவைப்பு: டெல்லி மேயர் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மனு
x

கோப்புப்படம்

2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் டெல்லி மேயர் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 104 வார்டுகளில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஜனவரி 4-ந்தேதி திட்டமிடப்பட்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல், ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க. உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட அமளி காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 24-ந்தேதி திட்டமிடப்பட்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலும் 2-வது முறையாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி மேயர் தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக்கோரி ஆம் ஆத்மி கட்சி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்றே விசாரிக்க கோரி முறையிடவும் ஆம்ஆத்மி கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர்.


Next Story