ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜேந்திர பால் கவுதம் காங்கிரசில் இணைந்தார்


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜேந்திர பால் கவுதம் காங்கிரசில் இணைந்தார்
x

ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜேந்திர பால் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ராஜேந்திர பால் கவுதம் அக்கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், கட்சியின் டெல்லி தலைவர் தேவேந்திர யாதவ் ஆகியோர் முன்னிலையில் ராஜேந்திர பால் காங்கிரசில் இணைந்தார். முன்னதாக தனது எக்ஸ் தளத்தில், சமூக நீதிக்கான போராட்டத்தை விரைவுபடுத்த ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரசில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பால் கூறியதாவது, சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் - இதைத்தான் ராகுல் காந்தி பேசுகிறார். வெறுப்புச் சந்தையில் அன்பின் கடைகளைத் திறப்பதாகப் பேசுகிறார். அரசியல் சாசனம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை காப்பாற்றுவது பற்றி பேசுகிறார். நான் புலே, அம்பேதகர், பெரியார், கன்ஷிராம் ஆகியோரின் போராட்டத்திற்காக போராட்டி வருகிறேன். ஆம் ஆத்மி கட்சி அதற்காக உழைக்க தயாராக இல்லை. ஆனால் காங்கிரஸ் அதற்காக உழைத்தால் நான் ஏன் அவர்களுடன் சேரக்கூடாது?. எனவேதான், நான் அவர்களுடன் சேர முடிவு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story