பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது


பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
x

கோப்புப்படம்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

சண்டிகார்,

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் கேட்டார். ஆனால் இந்த தொகையை விடுவிப்பதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தருமாறு எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ரஷிம் கார்க் கேட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரூ.4 லட்சத்துடன் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ. அமித் ரத்தாவை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.


Next Story