டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர் பா.ஜனதாவில் சேர்ந்தார்
டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் ஷெராவத், பா.ஜனதாவில் சேர்ந்தார்.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பாக கடந்த புதன்கிழமை விடிய விடிய ஆம் ஆத்மி-பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே மோதல் நடந்தது. 15 தடவை மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் ஷெராவத், பா.ஜனதாவில் சேர்ந்தார். டெல்லி பா.ஜனதா அலுவலகத்தில், டெல்லி பா.ஜனதா செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, பொதுச்செயலாளர் ஹர்ஷ் மல்கோத்ரா ஆகியோர் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆம் ஆத்மியில் நிலவும் ஊழல், மூச்சடைக்கும் அளவுக்கு உள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் அமளியில் ஈடுபடுமாறு கட்சி மேலிடமே உத்தரவிட்டதால் பெரும் மனவேதனை அடைந்தேன்'' என்று கூறினார்.
Related Tags :
Next Story