பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை பிடிபட்டது


பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை பிடிபட்டது
x

மடிகேரி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை பிடிபட்டது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

குடகு:-

காட்டுயானை

குடகு மாவட்டம் மடிகேரி அருகே காரேகொப்பா கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. மேலும் காபித்தோட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்களை அந்த காட்டுயானை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த காட்டுயானையை பிடிக்கும்படி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக அந்த காட்டுயானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக விஜய், விக்ரம், சுக்ரீவா, லட்சுமணா, பிரசாந்த், ஹர்ஷா ஆகிய 6 கும்கி யானைகள் துபாரே யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தன. மேலும் காட்டுயானையை பிடிக்கும் பணியில் 50 வனத்துறை ஊழியர்களும் ஈடுபட்டு இருந்தனர்.

கயிற்றால் கட்டினர்

நேற்று காலையில் வனத்துறையினர் கும்கி யானைகளுடன் அந்த காட்டுயானயை தேடினர். அப்போது காரேகொப்பா கிராமத்தை

யொட்டிய ஒரு காபி தோட்டத்தில் அந்த காட்டுயானை நிண்று கொண்டிருந்தது. இதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளுடன் அந்த காட்டுயானையை சுற்றி வளைத்தனர். பின்னர் கால் நடை டாக்டரைக் கொண்டு துப்பாக்கி மூலம் மயக்கி ஊசி செலுத்தப்பட்டது.

இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்த அந்த காட்டுயானை அங்கேயே மயங்கி விழுந்தது. அதையடுத்து அதன் கால்களை கயிற்றால் வனத்துறையினர் கட்டினர்.

கிராம மக்கள் நிம்மதி

மயக்கம் தெளிந்த பிறகு அந்த காட்டுயானயை

கும்கி யானைகள் ஆசுவாசப்படுத்தின. பின்னர் கயிற்றால் கட்டி அந்த காட்டுயானையை கும்கி யானைகளைக் கொண்டு லாரியில் வனத்துறையினர் ஏற்றினர். தற்போது அந்த யானை துபாரே யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த யானைக்கு அங்கு வைத்து கும்கி பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் பிடிபட்டது 18 வயதான ஆண் காட்டுயனை என்றும் கூறினர்.

காட்டுயானை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Next Story