டெல்லி: யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரையை கரைக்க ரசாயனம் தெளிக்கும் பணி தீவிரம்!


டெல்லி: யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரையை கரைக்க ரசாயனம் தெளிக்கும் பணி தீவிரம்!
x

டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நச்சு நுரை படிந்து காணப்படுகிறது.

புதுடெல்லி,

'சத் பூஜை' எனப்படும் பூஜை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்வார்கள்.

இந்த ஆண்டு, இம்மாத கடைசியில் நடைபெறவுள்ள சத் பூஜையை ஒட்டி, டெல்லி துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, யமுனை நதிக்கரையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 'சத் பூஜை' எனப்படும் பூஜையை நடத்த ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள யமுனை நதியில் நச்சு நுரை படிந்து காணப்படுகிறது.சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை மாசுபாடுகள் ஆற்றின் நீரில் அதிக அளவு கலப்பதே இதற்குக் காரணம்.

இதனையடுத்து, அக்டோபர் 25 முதல் பூஜை நாள் வரை யமுனை நதியில் நச்சு நுரை படியாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதிப்பொருட்கள் தெளிக்க முடிவு செய்யப்பட்டது.மேலும், ஆற்று நீரில் நுரை மிதப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, டெல்லி யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரையைக் கரைக்க ரசாயனம் தெளிக்கும் பணியில் டெல்லி நீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் படகில் சென்று ஆற்று நீரில் ரசாயனம் தெளித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story