அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து


அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து
x

பஜ்பே பகுதியில், திடீர் மின்கசிவால் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

மங்களூரு:-

மூச்சுத்திணறல் ஏற்பட்டு...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் கன்டவாரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேற தொடங்கியது.

இதையடுத்து பயங்கரமாக தீ பரவ தொடங்கியது. மேலும், சிறிது நேரத்தில் கட்டிடத்தின் 4 மாடிகளுக்கு தீ பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் கத்தி கூச்சலிட்டனர். மேலும், கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதி அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் ஓடி வந்து பார்வையிட்டனர். மேலும், உடனடியாக பஜ்பே பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் பேரில் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 4 மாடிகளுக்கு பரவி பற்றி எரிந்த தீயை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் கட்டிடத்தின் ஒருபகுதி தீயில் எரிந்து நாசமானது. இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு, குடியிருப்பில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.

மீட்டர் பெட்டி

இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து அறிந்த பஜ்பே போலீசார் குடியிருப்பு பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும், விசாரணை நடத்தினர். விசாரணையில்

அந்த அடுக்குமாகுடியிருப்பு கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆவதும், மொத்தம் உள்ள 21 அடுக்குமாடியில் 6 மாடியில் மட்டும் மக்கள் வசித்து வருவதும் தெரிந்தது.

இந்த நிலையில் குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீட்டின் மின்மீட்டர் பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story