ஓடும் காரில் திடீர் 'தீ'; 5 பேர் உயிர் தப்பினர்


ஓடும் காரில் திடீர் தீ; 5 பேர் உயிர் தப்பினர்
x

ஓடும் காரில் திடீர் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் சார்மடி மலைப்பாதையில் அண்ணப்பா சுவாமி கோவில் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் மங்களூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. காரில் 5 பேர் பயணித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த காரில் இருந்து புகை வந்தது. இதனால் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு என்ஜின் பகுதியை திறந்து பார்க்க முயன்றார். அதற்குள் காரில் தீப்பிடித்துக் கொண்டது.

அந்த தீ கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் காரில் பயணித்து வந்த டிரைவர் உள்பட அனைவரும் கீழே இறங்கி உயிர் தப்பினர். இந்த தீவிபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story