தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி சாதனை
தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், 'தீபோத்ஸவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன. கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
Related Tags :
Next Story