வானில் ஆகஸ்ட் 30-ந்தேதி நிகழ இருக்கும் 'சூப்பர் புளூ மூன்' அரிய நிகழ்வு


வானில் ஆகஸ்ட் 30-ந்தேதி நிகழ இருக்கும் சூப்பர் புளூ மூன் அரிய நிகழ்வு
x

‘சூப்பர் புளூ மூன்’ நிகழ்வின் போது நிலா சற்று பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

புதுடெல்லி,

பூமியை சுற்றி வரும் நிலவானது, பூமிக்கு மிக அருகில் வரும் போது 'சூப்பர் மூன்' அல்லது 'புளூ மூன்' நிகழ்வை நாம் காணலாம். இந்த இரண்டும் சேர்ந்து நிகழ்வது 'சூப்பர் புளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது நிலா வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந்தேதி(நாளை) 'சூப்பர் புளூ மூன்' நிகழ்வு நடைபெற உள்ளது. ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி வருவது 'புளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. சூப்பர் மூன் மற்றும் புளூ மூன் இரண்டும் சேர்ந்து நிகழ்வது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வானது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும். அந்த வகையில் நாளை நிகழ இருக்கும் 'சூப்பர் புளூ மூன்' நிகழ்விற்குப் பிறகு அடுத்த 'சூப்பர் புளூ மூன்' வரும் 2037-ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story