வங்கக்கடலில் 14ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி


வங்கக்கடலில் 14ம் தேதி  உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
x
தினத்தந்தி 12 Oct 2024 7:08 AM GMT (Updated: 12 Oct 2024 7:54 AM GMT)

வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

புதுடெல்லி,

வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

முன்னதாக , வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story