இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி - மத்திய மந்திரி பாரதி பிரவிண் தகவல்
இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பாரதி பிரவிண் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நமது நாட்டில் கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு எதிராக 9 கோடியே 7 லட்சம் பேருக்கு முன் எச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு, நேற்று எழுத்து மூலம் பதில் அளிக்கையில் மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி 9 மாதங்கள் என்பதை 6 மாதங்கள் என மத்திய அரசு குறைத்தது, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பரிந்துரைகள் பேரில்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story