மத்தியபிரதேசத்தில் 883 கிலோ கஞ்சா பறிமுதல்
மத்தியபிரதேசத்தில் 883 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தூர்,
மத்தியபிரதேசத்தின் சேகோர் மாவட்டத்தில் 2 வாகனங்களில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஒரு காரையும், லாரியையும் நேற்று முன்தினம் அவர்கள் மடக்கிப் பிடித்தனர். அந்த வாகனங்களில் மறைத்துவைத்திருந்த ரூ.1.32 கோடி மதிப்புள்ள 883 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தூரில் பெருமளவில் கஞ்சா கைப்பற்றப்படுவது இந்த ஆண்டில் இது 14-வது முறையாகும்.
நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த ஆந்திரா, ஒடிசா மாநில எல்லைப் பகுதிகளில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story