உலகம் முழுவதும் 80 கோடி பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்


உலகம் முழுவதும் 80 கோடி பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்
x

கோப்புப்படம்

உலகம் முழுவதும் 80 கோடி பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

புவனேஸ்வர்,

உலக சிறுநீரக தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புவனேஸ்வர் மருத்துவக்கல்லூரியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் சிறுநீரகவியல் பிரிவு தலைவர் டாக்டர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, உலக அளவில் 80 கோடி பேர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். அதாவது ஒரு லட்சம் பேரில் 80 பேருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக அவர் கூறினார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருவதாக தெரிவித்த டாக்டர் மொகந்தி, இதனால் நிலைமை மிகவும் மோசமடைவதாகவும் கவலை வெளியிட்டார்.


Next Story