டெல்லி அருகே ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் பலி


டெல்லி அருகே ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து:  8 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2022 5:27 PM IST (Updated: 4 Jun 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தையடுத்து, தொழிற்சாலையில் தி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில தொழிலாளர்கள் ஆலையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சில தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை முடுக்கி விட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story