ஜூன் 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை வாரத்தில் 6 நாட்கள் பார்வையிட அனுமதி


ஜூன் 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை வாரத்தில் 6 நாட்கள் பார்வையிட அனுமதி
x
தினத்தந்தி 17 May 2023 3:15 AM IST (Updated: 17 May 2023 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. 2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜூன் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாைல 4.30 மணிவரை 7 தனித்தனி நேரங்களில் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.


Next Story