ஒவ்வொரு பயணிக்கும் ரெயில் பயணத்தில் 55 சதவீத சலுகை - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்


ஒவ்வொரு பயணிக்கும் ரெயில் பயணத்தில் 55 சதவீத சலுகை  - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
x

Image : PTI 

புல்லட் ரெயில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய அஸ்வினி வைஷ்ணவ் அகமதாபாத் சென்றார்.

அகமதாபாத்,

ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா தொற்று காலத்தில் இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டது. அதன்பின்னர் இந்த சலுகை இன்னும் தொடரப்படவில்லை .

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் புல்லட் ரெயில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய அஸ்வினி வைஷ்ணவ் அகமதாபாத் சென்றார்.

அப்போது அவரிடம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகை குறித்து கேள்வி எழுப்பபட்டது .

அதற்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ் , " இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்குகிறது. ஒரு இடத்திற்கு செல்ல ரெயில் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் என்றால், ரெயில்வே கட்டணம் 45 ரூபாய் மட்டுமே. அது 55 ரூபாய் சலுகை அளிக்கிறது " என்றார்.


Next Story