2023-ல் விமான நிறுவனங்களுக்கு எதிராக 542 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - டி.ஜி.சி.ஏ. தகவல்
2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 77 சதவீதம் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
விமான போக்குவரத்தின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2023-ம் ஆண்டு விமான நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 542 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(டி.ஜி.சி.ஏ.) தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 305 அமலாக்க நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது, 2023-ல் 77 சதவீதம் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது. மேலும் விமான நிறுவனங்கள், ஏரோட்ரோம் ஆபரேட்டர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story