51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் - நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் இன்று 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story