லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் - அமித் ஷா அறிவிப்பு


லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் - அமித் ஷா அறிவிப்பு
x

கோப்புப்படம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்த நிலையில் லடாக் மாவட்டங்களில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை கட்டமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பின்பற்றும் வகையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பரா, சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story