கேரளா: தொடுபுழா நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாப பலி - நிவாரணம் அறிவிப்பு


கேரளா: தொடுபுழா நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாப பலி - நிவாரணம் அறிவிப்பு
x

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இடுக்கி,

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே இருக்கும் மலைக் கிராமத்தில் அதிகாலை மூன்று மணி அளவில் பயங்கர நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கினர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் தொடுபுழா தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மோப்ப நாய் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில் முதலில் பெண் மற்றும் சிறுமி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மேலும் சிக்கிய மூவரை சடலமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக சோமன், அவரது மனைவி ஷிஜி (50), தாயார் தங்கம்மாள் (72), மகள் ஷிமா (24), அவரது மகன் தேவானந்த் (4) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


Next Story