உத்தரகாண்டில் ராகிங்: 44 மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை
உத்தரகாண்டில் ராகிங் செய்வதாக எழுந்த புகாரின் பேரில் 44 மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்வதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் ராகிங் ஒழிப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு மாணவரை மிரட்டி, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு அவரை கல்லூரியிலிருந்து வெளியேற்றியது. மேலும் 43 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story