3 ஆயிரம் அரசியல்வாதிகளிடம் அதிரடி சோதனை; மூத்த எம்.பி. குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்


3 ஆயிரம் அரசியல்வாதிகளிடம் அதிரடி சோதனை; மூத்த எம்.பி. குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்
x

3 ஆயிரம் அரசியல்வாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்ற மூத்த எம்.பி. குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுதவிர, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மசோதாவை கொண்டு வரவேண்டும், போதை பொருள் வினியோகம் மற்றும் நுகர்வு அதிகரிப்பு பற்றிய விவாதம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை பற்றி கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என பல்வேறு கட்சி சார்பில் கோரிக்கைகளும் விடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் இன்று பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், சமூக ஊடகங்களில் மக்கள் பல விசயங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அவை உண்மையென்று நிரூபணம் செய்யப்படாத விசயங்களாக உள்ளன.

அவையில், மூத்த உறுப்பினர் ஒருவர் 3 ஆயிரம் அரசியல்வாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். அது முற்றிலும் தவறான தகவல் அடிப்படையிலானது என அவர் கூறியுள்ளார். எனினும் மத்திய மந்திரி கோயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்த சட்டமும் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


Next Story