பிரதமர் வருகையின்போது தரமற்ற சாலைகள் அமைத்தது குறித்து 3 என்ஜினீயர்களுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீசு


பிரதமர் வருகையின்போது தரமற்ற சாலைகள் அமைத்தது குறித்து  3 என்ஜினீயர்களுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீசு
x

பிரதமர் மோடி வருகையின்போது தரமற்ற சாலை அமைக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து 3 என்ஜினீயர்களுக்கு விளக்கம் கேட்டு பெங்களூரு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது.

பெங்களூரு: பிரதமர் மோடி வருகையின்போது தரமற்ற சாலை அமைக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து 3 என்ஜினீயர்களுக்கு விளக்கம் கேட்டு பெங்களூரு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது.

சாலை பெயர்ந்தது

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 20-ந் தேதி கர்நாடகம் வந்தார். அவர் அன்றைய தினம் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக அவர் பயணம் செய்த ஹெப்பால், மைசூரு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சாலைகள் தார், ஜல்லி கலவையால் புதுப்பிக்கப்பட்டன. மற்றும் தெருவிளக்குகள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு ரூ.23 கோடியை பெங்களூரு மாநகராட்சி செலவு செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வந்து சென்ற மறுநாளே தார் போடப்பட்ட சாலைகளில் தாருடன் ஜல்லி பெயர்ந்து எழுந்தது. சில இடங்களில் பள்ளமும் ஏற்பட்டது.

இதுகுறித்து வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்த செய்திகள் தேசிய அளவில் ஆங்கில ஊடகங்களிலும் வெளியானது. இந்த நிலையில் பிரதமர் வருகையின்போது தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கம் கேட்டு நோட்டீசு

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் என்ஜினீயர்கள் எஸ்.டி.பாலாஜி, ரவி, விஸ்வாஸ் ஆகிய 3 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், "ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் சாலை அமைத்தபோது அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன், சாலை போடும்போது அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யாதது ஏன், தவறு செய்த ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்ேபாது பரபரப்ைப ஏற்படுத்தி வருகிறது.


Next Story