மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம்


மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம்
x

அடுத்த கூட்டம் சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறினார்.

பாட்னா,

பீகார், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.

பீகார் முதல் - மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர்.

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிறைவடைந்த நிலையில் நிதிஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு பெற்றது. எதிர்க்கட்சித்தலைவர்கள் ஒருமனதாக ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம். சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம் நடைபெறும். பாஜகவை எப்படி எதிர்க்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Next Story