குடகில் வருகிற 23-ந்தேதி கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம்; கன்னட கலாசார துறை தகவல்


குடகில் வருகிற 23-ந்தேதி கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம்; கன்னட கலாசார துறை தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடகில் வருகிற 23-ந்தேதி கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம் நடைபெறுவதாக கன்னட கலாசார துறை தெரிவித்துள்ளது.

குடகு;

விடுதலைக்காக போராடிய கித்தூர் ராணி சென்னம்மாவை நினைவுகூரும் வகையில், குடகில் வருகிற 23-ந் தேதி கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம் கொண்டாடப்படும் என்று கன்னட கலாசார துறை தெரிவித்துள்ளது.

3 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தையொட்டி நேற்று கித்தூர் ராணி சென்னம்மாவின் ஜோதி யாத்திரை தொடங்கியது. இதில் கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயரில் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு, அது மாநிலம் முழுவதும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னட கலாசாரத்துறை உதவி இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:- கித்தூர் ராணி சென்னம்மாவின் விஜய ஜோதி யாத்திரை வாகனம் மாநிலம் முழுவதும் சுற்றி வரும். இந்த வாகனம் சுதந்திரத்திற்காகவும், பெலகாவியின் விடுதலைக்காகவும் போராடிய கித்தூர் ராணி சென்னம்மாவின் வரலாற்றை நியாபகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையை தொடர்ந்து வருகிற 23-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story