'தமிழகம்' என்ற பெயரை முன்னிலைப்படுத்தி ஏற்கனவே 21 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு


தமிழகம் என்ற பெயரை முன்னிலைப்படுத்தி ஏற்கனவே 21 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு
x

21 கட்சிகளும் தேர்தல் கமிஷனில் பெயர்களை பதிவு செய்த நிலையில், அங்கீகாரம் பெறாத மாநில கட்சிகளாக விளங்கி வருகின்றன.

புதுடெல்லி,

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி, இந்திய தேர்தல் கமிஷனில் ஏற்கனவே 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் பெயர்கள் வருமாறு:-

தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில கட்சி, தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி, தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் நலக் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், தமிழர் தேசிய முன்னணி, தமிழர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மகாத்மாகாந்தி மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் தேசம் கட்சி.

மேற்கண்ட இந்த 21 கட்சிகளும் தேர்தல் கமிஷனில் பெயர்களை பதிவு செய்த நிலையில், அங்கீகாரம் பெறாத மாநில கட்சிகளாக விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story