அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது..!
இமயமலை அமர்நாத் குகைக்கோவில் புனித யாத்திரைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
ஜம்மு - காஷ்மீர்,
ஜம்மு - காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவில், உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை வரும் ஜூன் 30ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைகிறது. 43 நாட்கள் நடக்கும் அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இணையதளம் மூலமும், அமர்நாத் கோயில் போர்டின் 566 கிளைகள் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
13 வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 75 வயதுக்கும் அதிமான முதியவர்களுக்கு அனுமதி இல்லை. 2 ஆண்டுக்கு பின் நடைபெற உள்ள புனித யாத்திரையில் 8 லட்சம் பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக குடிநீர், தங்கும் இடம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணி துவங்கி உள்ளது.
Related Tags :
Next Story