காஷ்மீரின் வரலாற்று சிறப்பு மிக்க முகலாய சாலை - விரைவில் திறக்க முடிவு


காஷ்மீரின் வரலாற்று சிறப்பு மிக்க முகலாய சாலை - விரைவில் திறக்க முடிவு
x

பனி அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் முகலாய சாலையை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க முகலாய சாலை, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கிறது. இந்த சாலை கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் முகலாய சாலை பிரிவின் கீழ், கடந்த மார்ச் மாதம் முதல் கனரக இயந்திரங்களுடன் பனி அகற்றும் நடவடிக்கை மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. தற்போது, பனி அகற்றும் பணி முடிவடைந்துள்ள நிலையில் முகலாய சாலையை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story