ஹிஜாப் விவகாரம்: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா சொல்வது என்ன?


ஹிஜாப் விவகாரம்: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா சொல்வது என்ன?
x
தினத்தந்தி 15 March 2022 4:17 PM IST (Updated: 15 March 2022 4:17 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் அளித்த தீர்ப்பு கேலிக்குரியது என உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

கர்நாடகா கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் ஹிஜாப் அணிவது இஸ்லாமில் அத்தியாவசியம் கிடையாது என்றும் உத்தரவிட்டது. 

கர்நாடக  ஐகோர்ட் தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இவ்விவகாரம் குறித்து கூறும் போது, “ 
'கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. 

ஹிஜாப் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிப்பதுபோல் வெறும் ஆடை பற்றியது அல்ல. ஒரு பெண் எப்படி ஆடை அணிய விரும்புகிறாள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அப்பெண்ணின் உரிமையைப் பற்றியது. இந்த அடிப்படை உரிமையை கோர்ட்  நிலைநாட்டவில்லை என்பது கேலிக்குரியது” என்றார். 

மெகபாபூபா முப்தி கூறும் போது, “ ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவு அதிருப்தி அளிக்கிறது. ஒரு பக்கம் பெண்களின் உரிமை மற்றும் அவர்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து பேசும் நாம், பெண்கள் விரும்பும் ஆடைகளை கூட அணிவதற்கு உரிமை அளிப்பது இல்லை. இந்த உரிமை கோர்ட் மூலம் வரையறுக்கக் கூடாது” என்றார். 


Next Story