புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 4 Feb 2022 3:16 AM IST (Updated: 4 Feb 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளன.


புதுச்சேரி,



புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 10ம்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

இதன்பின்னர், தொற்று குறையாத நிலையில், 10ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18ந்தேதி மூடப்பட்டன.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (4ந்தேதி) முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.


Next Story