கேரளாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு


கேரளாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2022 6:48 PM IST (Updated: 9 Jan 2022 6:48 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்த்து கொண்டே வருகிறது.

திருவனந்தபுரம்

 கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்த்து கொண்டே வருகிறது .இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை  மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2 ஆயிரத்து 390  பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34,902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 30  பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story