‘பருவநிலை மாற்ற உச்சிமாநாடு இந்தியாவுக்கு வெற்றி’ மத்திய மந்திரி கருத்து


‘பருவநிலை மாற்ற உச்சிமாநாடு இந்தியாவுக்கு வெற்றி’ மத்திய மந்திரி கருத்து
x
தினத்தந்தி 15 Nov 2021 2:45 AM IST (Updated: 15 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு, பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

கிளாஸ்கோ, 

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு, பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. 12-ந் தேதி முடிய வேண்டியது. ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நேற்று முன்தினம் முடிந்தது.

இந்த மாநாட்டில் புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் தலையீடு இருந்தது. நிலக்கரி, எண்ணெய் போன்ற புதைவட எரிபொருட்களை ஒரே நாளில் ஒழித்துக்கட்டுவதைவிட பல கட்டங்களாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது. இந்த தலையீடு அங்கீகரிக்கப்பட்டு, புதிய பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதை கிட்டத்தட்ட 200 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இதுபற்றி இந்திய தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் கருத்து தெரிவிக்கையில், “இந்த உச்சி மாநாடு இந்தியாவுக்கு வெற்றிதான். ஏனென்றால் வளரும் நாடுகளின் கவலைகள், யோசனைகளை நாங்கள் சுருக்கமாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் எடுத்து வைத்தோம். ஆக்கப்பூர்வமான விவாதம், சமமான, நியாயமான தீர்வுகளுக்கான வழிகளை இந்தியா முன் வைத்தது” என கூறினார்.

Next Story