ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்


ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்
x
தினத்தந்தி 13 Nov 2021 7:27 PM IST (Updated: 13 Nov 2021 7:27 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி வாழ்த்தினார்.


புதுடெல்லி, 

விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது .அதன்படி   இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு  விருதுகளை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்  வழங்கி வாழ்த்தினார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

 மேலும்  பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதேபோல் மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை (துப்பாக்கி சுடும் போட்டி) அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில் ஆகியோரும் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றனர்.



Next Story